ஆழ்வார்பேட்டை: ஆழ்வார்பேட்டை, டி.டி.கே., சாலையில் உள்ள சங்கரா ஹாலில் 'கிராப்ட் கார்டன்' கைத்தறி கண்காட்சி துவங்கியது.
இதில் பெண்களைக் கவரும் விதமாக காஷ்மீர் சில்க் புடவைகள், உ.பி., மாநில தரை விரிப்புகள், ஸ்படிக மணிகள், லிங்கம், பித்தளையில் உருவாக்கப்பட்ட சிலைகள், வீட்டுக்கு தேவையான பீங்கான் பாத்திரங்கள் உட்பட பல பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
பிரபல ஓவியர் ரவி வர்மாவின் 'வாட்டர் பெயின்ட்' ஓவியங்கள், அதிகம் பேரால் வாங்கப்பட்டன. கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள ஐம்பொன் ஆபரணங்கள், பெண்களை மிகவும் கவர்ந்தன.
'தங்கம் வேண்டாம், ஐம்பொன் போதும்' என்ற அளவிற்கு அதிகம் பேர், இந்த நகைகளை விரும்பி வாங்கினர். புதிய மாடல்களில் வளையல், செயின், ஆரம், கம்மல் என, ஐம்பொன் நகைகள் 500 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை விற்கப்படுகின்றன.