நீலாங்கரை: சென்னை, நீலாங்கரை, கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து வரும் அடுக்குமாடி கட்டுமான பணியில், வடமாநிலத்தைச் சேர்ந்த மக்சுடல் ஹோக், 22, என்பவர், 'சென்ட்ரிங்' வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை, கட்டடத்தின், 10 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நீலாங்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.