மேற்கு தாம்பரம்: சென்னை, மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீ சாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியின் 11வது பட்டமளிப்பு விழா, நேற்று முன்தினம் நடந்து.
சாய்ராம் குழும நிறுவனங்களின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி டாக்டர் சாய் பிரகாஷ் லியோ முத்து தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக, திருச்சி ஐ.ஐ.டி., இயக்குனர் டிஆர்.நரசிம்ம சர்மா, குளோபல் தலைவர்- சம்பத்குமார் வீரராகவன் ஆகியோர் பங்கேற்றனர்.
ஸ்ரீ சாய்ராம் தொழில்நுட்பக்கழகத்தின் முதல்வர் டாக்டர் பழனிகுமார் வரவேற்று, கல்வி அறிக்கையை வழங்கினார்.
அண்ணா பல்கலைக்கழக கல்லுாரி அளவில் 15 ரேங்க் பெற்றவர்கள் மற்றும் 625 மாணவ - மாணவியருக்கு, பட்டமளிக்கப்பட்டது. தவிர, விருது மற்றும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. ரேங்க் பெற்ற அனைவருக்கும், ஒட்டுமொத்தமாக 12 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
டாக்டர் சாய் பிரகாஷ் லியோ முத்து கூறுகையில், ''மாணவர்கள், வேலை தேடுபவராக இல்லாமல், வேலை வழங்கு பவராக இருக்க வேண்டும். அனைத்து பிரச்னைகளுக்கும் சிக்கல் தீர்ப்பவராக இருக்க வேண்டும்,'' என்றார்.