அடையாறு: சென்னை, நீலாங்கரை அடுத்த வெட்டுவாங்கேணி, பூம்புகார் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபச்சாரம் நடப்பதாக அடையாறு, போலீஸ் துணை கமிஷனர் மகேந்திரனுக்கு புகார் வந்தது.
இதையடுத்து, தனிப்படை போலீசார் அந்த குடியிருப்பில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், அங்கிருந்த மூன்று பெண்களிடம் அடையாறு மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், வெட்டுவாங்கேணியைச் சேர்ந்த நளினி, 37, என்பவர் அடுக்கு மாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்து விபச்சாரம் நடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து, நளினியை கைது செய்த போலீசார், மற்ற இரு பெண்களை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
சென்னை வளசரவாக்கம் காமராஜர் சாலையில் உள்ள மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய, பாத்திமா ஜமாலி, 39, என்பவரை, விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து இரண்டு பெண்களையும் மீட்டனர்.