அம்பத்துார்: அம்பத்துார் அடுத்த கள்ளிக்குப்பத்தைச் சேர்ந்த சிறுவன் ஹரிகுமார், 14, தனியார் பள்ளியில் 9 ம் வகுப்பு படித்தார்.
நேற்று பள்ளி விடுமுறை என்பதால், வீட்டிற்கு அருகே உள்ள தாங்கல் குளத்தில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, குளத்தில் தடுமாறி விழுந்தார். சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்துார் தீயணைப்பு துறையினர், குளத்தில் இறங்கி ஹரிகுமாரை சடலமாக மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அம்பத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.