சூளைமேடு: சூளைமேடில் ஆட்டோவில் சந்தேகப்படும்படியாக மூன்று பேர் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் சூளைமேடு போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர்கள் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்றது தெரிந்தது. விசாரணையில், அவர்கள், எம்.ஹெச்.காலனி கபிலன், 53, கார்த்திக், 61, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேசன், 52 என, தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
திருவல்லிக்கேணி, அசுதீன் கான் தெருவில் ஒரு நம்பர் லாட்டரி விற்ற, அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை, 60, இளங்கோ, 39, தாஸ், 52, ஆகியோரை கைது செய்தனர்.