திருச்செந்துார்:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சண்முகார்ச்சனைக் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பல்வேறு கட்டளைகள் மற்றும் பூஜைகள் நடந்து வருகின்றன. இதில், சண்முகார்ச்சனை கட்டளை முக்கியமானது.
இதற்கு கட்டணமாக, 1995 நவ., 8ம் தேதி முதல், 1,500 ரூபாய் கோவில் நிர்வாகத்தால் வசூலிக்கப்பட்டு வந்தது. இதை, தற்போது 5,000 ரூபாயாக உயர்த்த கோவில் அறங்காவலர் குழு தீர்மானம் நிறைவேற்றியது.
சட்ட விதிகளின்படி அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஆட்சேபனை எதுவும் வராததால் சண்முகார்ச்சனை கட்டணம், 5,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
நாளை முதல் இக்கட்டண உயர்வு நடைமுறைக்கு வரும் என, கோவில் அறங்காவலர் குழு தெரிவித்தது.