திருவொற்றியூர்: இருசக்கர வாகனத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரயில் மோதி பலியானார்.
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் சரவணன், 38. நேற்று மாலை, திருவொற்றியூர், ராஜாஜி நகரில் இரு சக்கர வாகனத்தில், ரயில்வே கேட்டை கடக்க முயன்றார்.
அப்போது, அவ்வழியே வந்த விரைவு ரயில் மோதி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், சடலத்தை மீட்டு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.