திருவொற்றியூர்: திருவொற்றியூர் அடுத்த, காலடிப்பேட்டையைச் சேர்ந்தவர் நாகூர் மீரான், 38, இவர், 10 ஆண்டுகளுக்கு முன், அதே பகுதியைச் சேர்ந்த ஹாஜி என்பவரை கொலை செய்தார். இந்த வழக்கில் சிறை சென்றவர், ஜாமினில் வந்த பின் தலைமறைவானார்.
இந்நிலையில், நாகூர் மீரான் ஆந்திராவில் பதுங்கியிருப்பதாக திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உதவி ஆய்வாளர் இர்பான் தலைமையிலான தனிப்படை போலீசார், கடப்பா பகுதியில் பதுங்கியிருந்த, நாகூர் மீரானை ேநற்று கைது செய்து, திருவொற்றியூருக்கு அழைத்து வந்தனர்.
அவர் மீது, திருவொற்றியூர், கும்மிடிப்பூண்டி, மற்றும் 'சிப்காட்' பகுதியில், ஐந்து கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.