கொடைக்கானல்:வார விடுமுறையான நேற்று திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
தரைப்பகுதியில் வெளுத்து வாங்கும் கோடை வெயிலை சமாளிக்க குளு குளு கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். வார விடுமுறை பொதுத்தேர்வு நடப்பதால் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஏராளமான மாணவர்கள் பெற்றோருடன் கொடைக்கானலில் முகாமிட்டனர்.
பிரையன்ட் பூங்கா ரோஜா பூங்கா கோக்கர்ஸ்வாக் வெள்ளி நீர்வீழ்ச்சி மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம் பேரிஜம் பசுமை பள்ளத்தாக்கு செட்டியார் பூங்காவை அவர்கள் ரசித்தனர்.
மதியத்திற்கு பின் பயணிகள் படகு சவாரி செய்தும் ஏரி சாலையில் குதிரை சைக்கிள் சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.
காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
அவ்வப்போது தரையிறங்கிய மேக கூட்டத்தை சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.