நாகப்பட்டினம், : டாஸ்மாக் கடையில் கடனுக்கு மது தராத ஆத்திரத்தில், பார் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம் தேவூரில் டாஸ்மாக் கடையில், நேற்று முன்தினம், விற்பனை உதவியாளர்கள் ரமேஷ்குமார், செல்வம் பணியில் இருந்தனர்.
அப்போது டாஸ்மாக் கடைக்கு வந்த ராதா மங்களம், புகழேந்திரன்,38, பட்டமங்களம் அஜீத், 40; ஆகியோர் கடனுக்கு மது கேட்டனர். விற்பனையாளர்கள் தர மறுத்ததால் கத்தியை காட்டி மிரட்டி தகராறு செய்துள்ளனர்.
அப்போது டாஸ்மாக் அருகே பார் நடத்தி வரும் பாஸ்கர் கடனுக்கு மது கேட்ட இருவரையும் விரட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இருவரும், நேற்று முன்தினம் நள்ளிரவு, பாஸ்கர் வீட்டின் வாசலில் பெட்ரோல் குணடு வீசிவிட்டு தப்பினர். சத்தம் கேட்டு வீட்டில் இருந்தோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்தனர். இருப்பினும் இதில் பாஸ்கர் வீட்டின் வாசல் கதவு மற்றும் வாசலில் இருந்த பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன.
சம்பவ இடத்தை டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் பார்வையிட்டார். கீழ்வேளூர் போலீசார் புகழேந்திரன், அஜீத் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.