தியாகதுருகம், : தியாகதுருகம் மவுண்ட் பார்க் சி.பி.எஸ்.இ., பள்ளியில், பிளஸ் 1 சேர்க்கை கல்விக் கட்டணத்தில் 100 சதவீதம் ஸ்காலர்ஷிப் பெறுவதற்கான தகுதி தேர்வு இன்று நடக்கிறது.
இதுகுறித்து பள்ளி தாளாளர் மணிமாறன் கூறியதாவது;
கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் மவுண்ட் பார்க் பள்ளி தொடர்ந்து சேவை செய்து வருகிறது.
திறமையான மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு மேல்நிலை வகுப்பில் கட்டணமின்றி தரமான கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கில் ஆண்டு தோறும் திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது.
பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் அனைவரும் இத்தேர்வில் பங்கேற்கலாம்.
இன்று காலை 10:00 மணிக்கு துவங்கும் இத்தேர்வில் பத்தாம் வகுப்பு 5 பாடங்களில் இருந்து தலா 10, ஒரு மதிப்பெண் கேள்விகள் கேட்கப்படும். தேர்வில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு பிளஸ் 1 சேர்க்கை கல்வி கட்டணத்தில் 100 சதவீதம் சலுகை வழங்கப்படும்.
தேர்வுக்கு வரும் மாணவர்கள் வசதிக்காக விழுப்புரம், விருத்தாச்சலம், திருக்கோவிலுார், திருவண்ணாமலை, வேப்பூர், சங்கராபுரம் ஆகிய ஊரிலிருந்து இலவச பஸ் இயக்கப்படுகிறது.
ஆர்வம் உள்ள மாணவர்கள் தேர்வில் பங்கேற்று கல்விக் கட்டணம் இன்றி தரமான கல்வியை பெற அழைக்கிறோம்.