உளுந்துார்பேட்டை, : உளுந்துார்பேட்டையில் அரசு சார்பில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில், கடைகளுக்கு ஆள் எடுத்ததால் இளைஞர்கள், பெண்கள் அதிர்ச்சி யடைந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம்,உளுந்துார்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில்,ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்), வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம்ஆகியவைஇணைந்து,தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை நடத்தின.
முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு,மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., வேலை வாய்ப்புக்கான ஆணையை வழங்கினார்.
தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் என கூறியதால்,பல்வேறுதுறைசார்ந்தபெரிய நிறுவனங்கள் முகாமில் இடம் பெறும் என நம்பி ஏராளமான பெண்கள், இளைஞர்கள்வந்திருந்தனர்.
முகாமில் வைக்கப்பட்டிருந்தஅறிவிப்பு பேனரில் 53 நிறுவனங்களின்பெயர்கள் இடம் பெற்று இருந்தன.அதில், உளுந்துார்பேட்டை பகுதியில் உள்ள துணிக்கடை, மொபைல் போன் கடை,போட்டோஸ்டுடியோ, அறக்கட்டளை உள்ளிட்டவைகளின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
வேலை வாய்ப்பு முகாம் என அறிவித்து விட்டு, கடைகளுக்கு ஆட்கள் எடுத்ததால், முகாமிற்கு வந்த இளைஞர்கள்,இளம்பெண்கள் அதிர்ச்சியடைந்தனர்.