விருத்தாசலம், : எள் செடிகளில் வேர் அழுகல் நோயை எப்படி கட்டுப்படுத்துது என்பது குறித்து,விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் தவப்பிரகாஷ் அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு
மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் வானிலை காரணமாக எள் செடிகளில் வேர் அழுகல் நோய் தாக்க வாய்ப்புள்ளது.இந்த நோய் செடிகள் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் தாக்கும். இலைகள் மஞ்சளாகவும், மடங்கியும், காய்ந்தும் காணப்படுகிறது.
நோய் தீவிரம் அடையும் போது, இலைகள் உதிர்ந்து செடிகள் காய்ந்துவிடும். தண்டு பகுதியை பிளந்து பார்த்தால் பழுப்பு நிற தோற்றம் காணப்படும்.இதனை கட்டுப்படுத்த பேசிலஸ்சப்டிலிஸ் அல்லது டிரைக்கோடெர்மா ஆஸ்பெரெல்லம் ஏக்கருக்கு ஒரு கிலோ வீதம் 20 கிலோ தொழுஉரம் அல்லது மணலுடன் கலந்து விதைத்த 30வது நாள் மண்ணில் இட வேண்டும்.
நோய் தாக்கிய பகுதியில் கார்பென்டசிம் லிட்டருக்கு ஒரு கிராம் என்ற அளவில் கலந்து மண் நனையும்படி ஊற்ற வேண்டும்' என செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.