ஸ்ரீமுஷ்ணம், : ஸ்ரீமுஷ்ணத்தில் சி.ஐ.டி.யூ. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு வட்ட செயலாளர் வெற்றிவீரன், சி.ஐ.டி.யூ. மாவட்ட குழு உறுப்பினர் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர் பிரகாஷ், கரும்பு விவசாயிகள் சங்க மாநில குழு ஆதிமூலம் சிறப்புரையாற்றினர்.
இதில் வருகின்ற ௫ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மணி, ஜெயக்குமார், சுப்பிரமணியன், ரவிச்சந்திரன், குமார் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.