கோபி: கோபியில், தீயணைப்பு நிலையத்துக்கு சொந்த இடம் தேர்வு செய்வது குறித்து, அமைச்சர் முத்துசாமி, ஆய்வு செய்தார்.
கோபி பெரியார் திடல் எதிரே, நகராட்சி இடத்தில் இயங்கிய, கோபி தீயணைப்பு நிலையம், 2021, செப்., 12 முதல், கரட்டடிபாளையம் அருகே தனியார் இடத்தில், வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. தீயணைப்பு நிலையம் சொந்த இடத்தில் இயங்க, கோபி டவுன் பகுதியில், தீயணைப்பு துறையினர் பல ஆண்டாக நிலம் தேடி வந்தனர். டவுன் பகுதியில் போதிய இடவசதியின்றி, புறநகர் பகுதியான, பொலவக்காலிபாளையம் அருகே காலியிடம் இருப்பதை அறிந்தனர். இதனால் அந்த இடத்தை துறை
ரீதியாக, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, அமைச்சர் முத்துசாமி அடங்கிய குழுவினர் நேற்று மதியம் ஆய்வு செய்தனர்.
இதை தொடர்ந்து கோபி அருகே சாணார்பதியில், கீரிப்பள்ளம் ஓடையின் குறுக்கே, 1.50 கோடி ரூபாய் மதிப்பில், உயர்மட்ட பாலம் கட்டும் பணியை, அமைச்சர் முத்துசாமி துவங்கி வைத்தார்.