ஈரோடு: காங்., முன்னாள் தலைவர் ராகுலின் விமர்சனம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், எம்.பி., பதவியை உடனடியாக பறித்த மத்திய அரசை கண்டித்து, ஈரோடு தெற்கு மாவட்ட காங்., சார்பில், மாவட்ட தலைவர் மக்கள்ராஜன் தலைமையில், மூலப்பாளையத்தில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்
நடந்தது.
நீதிமன்ற உத்தரவுப்படி,
விமர்சனம் தொடர்பான வழக்கு மேல்முறையீடு செய்யப்பட உள்ள நிலையில், தீர்ப்பின் சாராம்சம்
மாற வாய்ப்புள்ளது. எனவே
அவரது எம்.பி., பதவியை உள்நோக்கத்துடன் பறித்ததாக கூறி கோஷமிட்டனர். நிர்வாகிகள் முத்துகுமார், பாலு, கதிர்வேல், ஈஸ்வரமூர்த்தி
உட்பட பலர் பங்கேற்றனர்.