ஈரோடு: ஈரோடு நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லுாயில், ஹிலாரியோ-23 என்னும், பல்வேறு கல்லுாரிகளுக்கு இடையேயான கலைத்திறன் போட்டி இரண்டு நாள் நடந்தது.
ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமை வகித்தார். அறக்கட்டளை உறுப்பினர் பானுமதி சண்முகன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை செயலர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் திருமூர்த்தி, முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம், முதன்மை நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலக்கப்போவது யாரு வி.ஜே.பப்பு, இரண்டாம் நாள் நிகழ்வில் குக் வித் கோமாளி பாலா மற்றும் மணிமேகலை கலந்து கொண்டனர்.
விழாவில் தனி நடனம், மவுன நாடகம், குழு நடனம், சமையல் போட்டி, தேவையற்ற பொருள்களிலிருந்து உபயோகமான பொருட்கள் தயாரித்தல் உள்பட மாணவர்களின் தனித்திறன்களை வெளிக்கொணரும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அறக்கட்டளை தலைவர் சண்முகன், பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 167க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் இருந்து, 3,650 மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.