சத்தியமங்கலம்: கடம்பூர் அருகே ஆம்னி வேனில், குட்கா பொருட்களை கடத்திய இருவரை, போலீசார் கைது செய்தனர்.
கடம்பூர் போலீசார் நேற்று மதியம் குன்றி பிரிவு என்ற இடத்தில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். ஒரு ஆம்னி வேனில் சோதனை செய்தனர்.
அதில் வந்த பங்களாபுதுார், இந்திரா நகரை சேர்ந்த முகமது யாசின், 38; நஞ்சகவுண்டம்பாளையம மாரிமுத்து, 45, ஆகியோர், முறுக்கு, பன், வியாபாரம் செய்து விட்டு வருவதாக தெரிவித்தனர்.
ஆனாலும், சந்தேகம் அடைந்த போலீசார், வேனில் சோதனை செய்ததில், குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள், 8.25 கிலோ எடையில் இருந்தன. குட்காவுடன் ஆம்னி வேனை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.