வெள்ளகோவில்: வெள்ளகோவில் பகுதியில் நேற்று முன்தினம், இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. நேற்று முன்தினம் மாலை, 6:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை தொடர்ந்து காற்றுடன் கன மழை கொட்டியது. உப்புப்பாளையம் ரோட்டில் வீட்டுக்குள் மழை நீர் புகுந்தது. சேனாபதிபாளையம் கிராமத்தில் நல்லசாமி என்பவரின் பசு மாடு, இடி தாக்கியதில் இறந்தது. தீத்தாம்பாளையத்தில் வேப்ப மரம் விழுந்ததால் நான்கு மின்கம்பங்கள் சாய்ந்தன. சேரன் நகரில் இடி தாக்கி டிரான்ஸ்பார்மர் பழுதடைந்தால், நள்ளிரவு வரை மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. சிவனாதபுரம் அருகே நெடுஞ்சாலை துறை விழிப்புணர்வு பலகை சாய்ந்து. வெள்ளகோவிலில் நேற்று காலை நிலவரப்படி, 76 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.