நாமக்கல்: நாமக்கல்லில் நடந்த தனியார் துறை வேலைவாய்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட, 231 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
மத்திய அரசின், 'தீனதயாள் உபாத்யாய' கிராம வேலைவாய்ப்பு திட்டம், மாநில அரசின் ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லுாரி வளாகத்தில், நேற்று நடந்தது.
முகாமை மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் பிரியா துவக்கிவைத்தார். அதில், கார்மெண்ட்ஸ், வெல்டிங், மருத்துவ
மனைகள், கல்வி நிறுவனங்கள், மெக்கானிக், செல்போன் பழுதுபார்த்தல், விற்பனை பிரதி
நிதி உள்ளிட்ட, 38 நிறுவனங்கள் பங்கு பெற்றன. பல்வேறு துறைகளுக்கு தகுதியுள்ள, 8ம் வகுப்பு முதல் பட்டம், செவிலியர், தொழிற்பயிற்சி, டிப்ளமோ, பொறியியல் கல்வித்தகுதி பெற்ற, 18 வயதிற்கு மேற்பட்ட, 528 பேர் கலந்து கொண்டனர்.
முகாமில் தேர்வு செய்யப்பட்ட, 231 பேருக்கு, எம்.எல்.ஏ., ராமலிங்கம் பணி நியமன ஆணைகள் வழங்கினார். நகராட்சி தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, உதிவி திட்ட அலுவலர் மாலதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.