குமாரபாளையம்: குமாரபாளையம் நாராயண நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில், போலீசார் சார்பில் மன மகிழ் மன்றம் துவங்கப்பட்டு விழிப்புணர்வு முகாம் நடத்தப்
பட்டது.
அரசு பள்ளிகளில் போலீசார் சார்பில் மனமகிழ் மன்றம் துவங்கப்பட்டு, மாணவ, மாணவியர்களின் திறன் மேம்பாட்டுக்கான பல்வேறு போட்டிகள் வைத்து பரிசு வழங்கி வருகின்றனர். இதில் ஒரு கட்டமாக, குமாரபாளையம் நாராயண நகரில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் குமாரபாளையம் போலீசார் சார்பில், 'மனமகிழ் மன்றம்' தொடங்கப்பட்டு, தலைமை ஆசிரியை பாரதி தலைமையில் விளையாட்டு போட்டிகள், கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ.,க்கள் தங்கவடிவேல், குணசேகரன் பரிசுகள் வழங்கினர். பெண்கள் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விடியல் பிரகாஷ், தீனா, உள்பட பலர் பங்கேற்றனர்.