நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், பச்சிளங்குழந்தைகள் வார்டில், எலி தொல்லை
அதிகரித்துள்ளதால், பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நாமக்கல்-மோகனுார் சாலையில், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு, அறுவை சிகிச்சை பிரிவு, பொது மருத்துவம், மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நலம், கண் மருத்துவம், தோல் மருத்துவம், காசநோய் பிரிவு, புற்றுநோய் சிகிச்சை உள்பட, 20க்கும் மேற்பட்ட பிரிவுகள் செயல்
படுகின்றன.
இந்த மருத்துவமனை, ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெற்றுள்ளதால், நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி, வெளிமாவட்டத்திலிருந்தும் தினமும், 2,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். 300க்கும்
அதிகமானோர் உள்நோயாளிகளாக தங்கியும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். குறிப்பாக
பிரசவத்துக்காக வெளிமாவட்டங்களில் இருந்தும் அதிகளவில் பெண்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும், 10க்கும் மேற்பட்ட பிரசவம் பார்க்கப்படுகிறது. இங்குள்ள பச்சிளங்குழந்தைகள் வார்டில், எலி தொல்லை அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, பொதுமக்கள் சிலர் கூறியதாவது:
நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவ
மனையில், பிரசவம் முடிந்து பச்சிளங்குழந்தைகள் வார்டில் குழந்தைகள் அனுமதிக்கப்
படுகின்றனர்.
அங்கு, குழந்தைகளுக்கான மெத்தை விரிப்பு, தலையணை, உணவு பொருட்கள் ஆகியவற்றை, அங்குள்ள எலிகள் கடித்து சேதப்படுத்துகின்றன. மேலும், எலிகளின் கழிவுகள், குழந்தைகளின் மெத்தை விரிப்பில் சிதறி துர்நாற்றம்
வீசுகிறது.
அதனால், தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து, மருத்துவமனை நிர்வாகத்துக்கு பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. விபரீதம் நடப்பதற்கு முன், மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, எலி தொல்லையில் இருந்து
பச்சிளங்குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.