துாத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் ஒன்றியம், கீழ்நம்பிபுரம் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில், ஆசிரியர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். மருத்துவர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் உள்ளதுபோல், பள்ளி ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்பு சட்டத்தை சட்டசபை கூட்டத்தொடரில் இயற்ற வேண்டும். அவற்றை வலியுறுத்தி, வரும், 29ல், ராசிபுரம் பி.டி.ஓ., அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பின்பும், வருவதற்கு முன்பும், அறிவித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. அதனை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர்களை போராட்டத்துக்கு துாண்டும் வகையிலான நிலைக்கு தள்ளிவிட வேண்டாம். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்
படுத்த அரசு முன்வர வேண்டும்.
மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் நாளில், மாநில அரசும் அறிவிக்க வேண்டும். ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட செயலாளர் சங்கர், பொருளாளர் பிரபு, ஒன்றிய செயலாளர் கதிரேசன், மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள்
உள்பட பலர் பங்கேற்றனர்.