சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அடுத்த பேளுக்குறிச்சியில், நேற்று, வாரச்சந்தை கூடியது. பல்வேறு பகுதிகளில் இருந்து மளிகை பொருட்களை விற்பனை செய்ய ஏராளமான வியாபாரிகள் கூடினர். திருச்சி, தஞ்சாவூர், ஈரோடு, நாமக்கல், புதுக்கோட்டை, கும்பகோணம், பெரம்பலுார், கள்ளக்குறிச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, டிராவல்ஸ், சரக்கு வேன், மினி லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்களில் ஏராளமான மக்கள்
வந்தனர்.
மிளகாய், புளி, கொத்தமல்லி, துவரம் பருப்பு, பாசி பருப்பு, தட்டைபயறு, கரு மொச்சை, சிவப்பு பீன்ஸ், நாட்டு சுண்டல், மராட்டி மொக்கு, இலை, ரோஜா பூ, கடல்பாசி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பிரியாணிக்கு தேவையான பொருட்கள், மளிகை பெருட்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதால் மொத்தமாகவும், சில்லரையாகவும்
வர்த்தகம் செய்தனர்.
இந்த வாரம், பேளுக்குறிச்சி வாரச்சந்தையில், 5 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.