நாமக்கல்: கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் பங்கேற்று பேசினார்.
கூட்டத்தில், கருணாநிதியின் நுாற்றாண்டு விழா, அவரது பிறந்த நாளான, வரும் ஜூன், 3 முதல் 2024 ஜூன், 3 வரை, ஓராண்டு காலம் சிறப்பாக கொண்டாட வேண்டும்; நாமக்கல் நகராட்சி பகுதியில் உள்ள செலம்ப
கவுண்டர் பூங்கா நுழைவு வாயில் அருகே, கருணாநிதியின் முழு உருவச்சிலை அமைக்க வேண்டும். வரும், 2024ல் லோக்சபா தேர்தலை முன்னிட்டு, தலைமை அறிவிப்பின்படி, சட்டசபை தொகுதி பார்வையாளர்களாக, நாமக்கல்லுக்கு அருள்மொழி, சேந்தமங்கலத்துக்கு முத்துசாமி, ராசிபுரத்துக்கு தண்டபாணி ஆகியோர் மேற்பார்வையில், பூத் கமிட்டி அமைத்து, தேர்தல் பணிகளை திறம்பட மேற்கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில நிர்வாகிகள் சுந்தரம், ராணி, டாக்டர் மாயவன், முன்னள் எம்.எல்.ஏ., சரஸ்வதி, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.