ஈரோடு: ஈரோடு மாநகராட்சி அனைத்து சங்க
நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமையில் நடந்தது.
மாநகராட்சி பணிகளை தனியாரிடம்
ஒப்படைக்கவும், நிரந்தர பணியிடங்களை ரத்து செய்யவும் பிறப்பித்த தொழிலாளர் விரோத அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில், 21 மாநகராட்சிகளில், சென்னை பெருநகர மாநகராட்சி தவிர, 20 மாநகராட்சிகளில், 3,417 நிரந்தர பணியிடங்கள் மட்டுமே அனுமதித்துள்ளனர்.
இதில் ஈரோடு மாநகராட்சியில், 172 நிரந்தர மட்டுமே அனுமதித்துள்ளனர். மீதி, 30 ஆயிரம் நிரந்தர பணியிடங்களை ரத்து செய்துள்ளனர். அவை அனைத்தும் அவுட் சோர்சிங் மூலம் நிரப்ப உள்ளனர்.
ஈரோடு மாநகராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட மகளிர் குழு தினக்கூலி பணியாளர்களை, 480 நாள் பணி செய்த அடிப்படையில் நிரந்தரப்படுத்தி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும், 28ல் ஈரோடு மாநகராட்சி ஆணையர், கலெக்டர் ஆகியோரிடம் மனு வழங்குதல்.
ஏப்.,11ல் மாநகராட்சி பணியாளர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம், உண்ணாவிரத போராட்டம் செய்வது. இதை தொடர்ந்து அடுத்தடுத்த போராட்டங்களை நடத்த
தீர்மானம் நிறைவேற்றினர்.