பெரம்பலுார்:காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை, தாயுடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலுார், பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணண், 45. இவரது மனைவி மலர்க்கொடி, 40. இவர்களின் மகன் வெங்கடேஷ், 26. சில நாட்களுக்கு முன் இவர் காதல் திருமணம் செய்துள்ளார்.
இதற்கு ராமகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்தார். நேற்று முன்தினம் இது தொடர்பாக வாக்குவாதம் நடந்த நிலையில், ராமகிருஷ்ணண் வீட்டின் முன் இரவு கட்டிலில் படுத்து துாங்கினார்
அப்போது, வெங்கடேஷ், மலர்க்கொடி சேர்ந்து, அவரை கட்டையால் அடித்துக் கொலை செய்து, உடலை வீட்டின் பின்புறம் வைத்து, இருவரும் தலைமறைவாகினர்.
தகவலறிந்த பெரம்பலுார் போலீசார், தலைமறைவாக இருந்த வெங்கடேஷ், மலர்க்கொடியை கைது செய்தனர். காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை, தாயுடன் சேர்ந்து அடித்து கொலை செய்த மகன் செயலால் பரபரப்பு ஏற்பட்டது.