அனைத்து ஊராட்சிகளிலும் 'இ - கிராம சேவை' மையம் | திருப்பூர் செய்திகள்| E-Gram Seva Center in all panchayats | Dinamalar
அனைத்து ஊராட்சிகளிலும் 'இ - கிராம சேவை' மையம்
Added : மார் 27, 2023 | |
Advertisement
 

திருப்பூர்;'பாரத்நெட்' திட்டத்தில், அதிவேக இணையதள வசதியுடன், ஊராட்சிகளில் 'இ-கிராம சேவை' மையம் அமைக்கும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

நகரங்களுக்கு இணையாக, கிராமங்களுக்கும் இணையதள சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்குடன், 'பாரத் நெட்' திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் தமிழகத்தில் உள்ள, 12 ஆயிரத்து, 525 ஊராட்சிகளுக்கும் இணையதள சேவை கிடைக்கும்.

ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பாரத் நெட் திட்டத்தில், 'இ-கிராமசேவை' மையம் துவங்க இருப்பதால், 31ம் தேதிக்குள், உட்கட்டமைப்பு பணிகளை முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

பெரும்பாலான பணி நிறைவடைந்த நிலையில், கேபிள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. 'இ-கிராம சேவை' மையத்தில், அதிவேக இணைய தள வசதியுடன், ஊராட்சி மக்களுக்கு அனைத்து வகை சேவைகளையும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது' என்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X