தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சிப் பகுதி சுவரில், இயற்கை ஓவியங்கள் வரைந்து அழகுப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில், சுற்றுச்சுவர், மேம்பாலச் சுவர், நடைமேம்பால துாண்கள் ஆகியவற்றை வண்ணம் தீட்டி, இயற்கை ஓவியங்களை வரைந்து, மாநகராட்சியை அழகுப்படுத்தும் நடவடிக்கை துவங்கப்பட்டு உள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ஜி.எஸ்.டி., சாலையின் இருபுறத்திலும் உள்ள சுற்றுச்சுவர், நடைமேம்பாலம், மேம்பாலம் ஆகிய இடங்களில் வண்ணம் தீட்டி, இயற்கை சார்ந்த ஓவியங்கள், மன்னர் ஆட்சிகளை விளக்கும் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.
மற்றொரு புறம், 'எனது குப்பை, எனது பொறுப்பு, துாய்மை இந்தியா' திட்டங்கள் குறித்து, வாசகங்கள் மூலம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.