நங்கநல்லுார்: தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க., சார்பில் இலவச மருத்துவ முகாம், நேற்று காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை நங்கநல்லுார், ஹிந்து காலனி செல்லம்மாள் வித்யாலயா பள்ளியில் நடந்தது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சரும், தொகுதி எம்.எல்.ஏ.,வுமான அன்பரசன் பங்கேற்று, முகாமை துவக்கி வைத்தார்.
இதயம், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கண், பொது மருத்துவம் ஆகியவற்றுக்கான இலவச மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
கல்லீரல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும், 7,000 ரூபாய் மதிப்பிலான 'பைப்ரோ ஸ்கேன்' பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டது.
இதில், நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்று பயன் அடைந்தனர். அவர்களுக்கு அரை கிலோ ஹார்லிக்ஸ், பிரட், குளிர்பானங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டன.
முகாமிற்கான ஏற்பாடு களை, ஆலந்துார் மண்டல குழு தலைவர் சந்திரன் செய்திருந்தார். வார்டு கவுன்சிலர் துர்காதேவி, உள்ளிட்ட கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.