கோயில்
பங்குனி பொங்கல் திருவிழா 4ம் நாள்: மாரியம்மன் கோயில், ரிசர்வ் லைன், மதுரை, சிறப்பு பூஜை, கும்மிப்பாட்டு - மாலை 4:00 மணி, மதுரை முத்து பல்சுவை நிகழ்ச்சி, இரவு 7:00 மணி, யாழ் இசைக் குழுவின் இசையும், நகையும், இரவு 8:00 மணி.
ஜகத்குரு பாரதீ தீர்த்த மஹா சுவாமிகளின் 73வது வர்தந்தி வைபவம்: சிருங்கேரி சங்கர மடம், பைபாஸ் ரோடு மற்றும் அம்மன் சன்னதி தெரு, மதுரை, ஏற்பாடு: ஜகத்குரு சங்கராச்சார்ய மகாசமஸ்தானம், சிருங்கேரி சாரதாபீடம், காலை 7:00 மணி.
பங்குனி மாத கோடை வசந்த உற்ஸவம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 7:00 மணி முதல்.
ராமநவமி உற்சவம்: வியாசர் தெரு, பழநிமுத்து நகர், வில்லாபுரம், மதுரை, முதல் காலம் - காலை 7:00 மணி முதல், 2ம் காலம் - மாலை 5:00 மணி முதல்.
பங்குனி திருவிழா விநாயகர் திருநாள்: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், விநாயகர் சப்பரம் இரவு - 7:00 மணி.
பங்குனி ப்ரம்மோற்சவ விழா, ஜெனகை நாராயண பெருமாள் கோயில், சோழவந்தான், அன்னவாகனத்தில் சுவாமி புறப்பாடு, இரவு 7.00 மணி.
வைகாசி திருவிழா, மூன்றுமாத கொடியேற்றம், ஜெனகை மாரியம்மன் கோயில், சோழவந்தான், மாலை 6.00 மணி முதல்
முளைப்பாரி ஊர்வலம், வடக்குபுற காளியம்மன் கோயில், கொட்டாம்பட்டி. மாலை 6.00 மணி.
பக்தி சொற்பொழிவு:
தலைப்பு கந்தர் அனுபூதி, பேசுபவர்- விருப்பாச்சி ராமகிருஷ்ணன்: 16 கால் மண்டபம், திருப்பரங்குன்றம், மாலை 6:00 மணி.
திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன்: திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.
சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
பகவத் கீதை பாராயணம்: நிகழ்த்துபவர் - ஆஸ்ரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
ராமாயண விரிவுரை: நிகழ்த்துபவர் - உதவிப் பேராசிரியர் துர்காதேவி, கீதா பவனம், சீதா ஹால், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
ராமநவமி விழா: நிகழ்த்துபவர் - கணேசன், வீர ஆஞ்சநேயர் கோயில், திருப்பரங்குன்றம், மதுரை, மாலை 6:30 மணி.
ராமநவமி உற்ஸவம் - வேணுகோபாலன் அலங்காரம்: சீதா ராமாஞ்சநேயர் தேவஸ்தானம், 46, மகால் 5வது அனுமார் கோவில் தெரு, மதுரை, மாலை 6:00 மணி.
பள்ளி கல்லுாரி
போட்டித் தேர்வு பயிற்சி கருத்தரங்கு: யாதவர் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: ஓய்வு ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், ஏற்பாடு: நேர்மை ஐ.ஏ.எஸ்., அகாடமி மதுரை, காலை 10:00 மணி.
என்.எஸ்.எஸ்., முகாம்: குலமங்கலம், ஆலங்குளம், பங்கேற்பு: ஒருங்கிணைந்த சேவை மைய பிரேமலதா, ஏற்பாடு: சேர்மத்தாய் வாசன் கல்லுாரி, காலை 10:00 மணி.
என்.எஸ்.எஸ்., முகாம்: தச்சம்பத்து, நெடுங்குளம், ரிஷபம், மேலக்கால், திருவேடகம், ஏற்பாடு: விவேகானந்தா கல்லுாரி, காலை 9:00 மணி.
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் கருத்தரங்கு: சவுராஷ்டிரா கல்லுாரி, பசுமலை, மதுரை, காலை 10:30 மணி.
*வரலாற்று துறை மாணவிகளுக்கு சொற்பொழிவு: காந்தி மியூசியம், மதுரை, பங்கேற்பு: காந்தி மியூசிய செயலாளர் நந்தாராவ், காலை 10:30 மணி.
*காந்திய சிந்தனை கருத்தரங்கம்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: கல்லுாரி முதல்வர் ஆரோக்கிய பிரசில்லா, ஏற்பாடு: மங்கையர்க்கரசி கல்வியியல் கல்லுாரி, காலை 11:30 மணி.
* 'பெண் கல்வி அவசியம்' கருத்தரங்கு: முத்துப்பட்டி, மதுரை, என்.எஸ்.எஸ்., முகாம், பங்கேற்பு: உதவிப்பேராசிரியர் அனிதா, ஏற்பாடு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, காலை 10:00 மணி.
பொது
மக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் அனீஷ் சேகர், காலை 11:00 மணி.
வைகை இலக்கிய திருவிழா: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, ஏற்பாடு: பள்ளிக் கல்வித்துறை - பொது நுாலக இயக்கம், காலை 10:00 மணி முதல்.
பாரத ஸ்டேட் வங்கி புதிய கிளை துவக்க விழா: சக்தி பிளாசா, 121, திருவாதவூர் ரோடு, நகராட்சி அலுவலகம் எதிரே, மேலுார், துவக்கி வைப்பவர்: துணைப் பொது மேலாளர் ஆனந்த், காலை 9:00 மணி.
மருத்துவம்
சர்வதேச பெண்கள் பரிசோதனை பேக்கேஜ்: மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை, காலை 7:00 மணி.
கண்காட்சி
சலுகை விலையில் ஆடைகள் கண்காட்சி விற்பனை: ேஹண்ட்லுாம் ஹவுஸ், 154, கீழவெளி வீதி, மதுரை, காலை 9:00 மணி முதல்.