பெரியபட்டினம், : முத்துப்பேட்டை கவுசானல் கலை அறிவியல் கல்லூரியில் நேருயுவகேந்திரா, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் மாவட்ட அளவிலானஇளையோர் பாராளுமன்றம் நிகழ்ச்சி நடந்தது.15க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
பார்லிமென்டில் இருப்பதை போன்று தனித்தனியாக இருக்கை வசதிகள் செய்யப்பட்டு அவற்றில் அமர வைக்கப்பட்ட மாணவர்கள் ஜி -20 மாநாடு குறித்த பல்வேறு செயலாக்க கருத்துக்களை பதிவு செய்தனர்.
உலகையே தன் பக்கம் திருப்பி உள்ள ஜி -20 உறுப்பு நாடுகளில் இந்தியாதலைமை வாய்ந்ததாகவும்,இந்தியாவின் குரல் உலகம் முழுவதும் எதிரொலிப்பதால் தனித்துவம் வாய்ந்த வல்லரசாக வரும் காலம் அருகில் உள்ளது, என மாணவ பேச்சாளர்கள் உரையாற்றினர்.
கல்லூரி செயலர் மரிய சூசை அடைக்கலம்தலைமை வகித்தார். முதல்வர் ஹேமலதா முன்னிலை வகித்தார். நேருயுவ கேந்திரா மாவட்ட இளைஞர் நல அலுவலர்பிரவின் குமார் வரவேற்றார். பயிற்சி துணை கலெக்டர் நாராயண சர்மா, தேவிபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் உலகராஜ், தென்றல் ஐ.ஏ.எஸ்., அகாடமி இயக்குனர் ஹரிகரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளி விநாயகம், ரெட் கிராஸ் மாவட்ட செயலாளர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் மல்லர் சிலம்பாட்ட கழகம் சார்பில் லோகசுப்பிரமணியன் குழுவினரின் சிலம்பாட்டம், கட்டைக்கால் ஆட்டம், மானாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விரிவுரையாளர் மகேஸ்வரி நன்றி கூறினார்.