பி.எச்டி., மாணவருக்கு பாலியல் தொந்தரவு: கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்
Updated : மார் 27, 2023 | Added : மார் 27, 2023 | கருத்துகள் (9) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

கோவை: கோவை துடியலுார் சாலையில் அமைந்துள்ள, அரசு உதவிபெறும் கல்லுாரியில் பி.எச்டி., மாணவருக்கு பாலியல் தொந்தரவு அளித்த பேராசிரியர் மதன்சங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், பாரதியார் பல்கலை தரப்பில் வழிகாட்டிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என சக பேராசிரியர்கள், மாணவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

படிக்கும் கல்லுாரியில் புகார் அளித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், பாதிக்கப்பட்ட மாணவன் கடந்த, 10ம் தேதி பாரதியார் பல்கலை புகார் கமிட்டிக்கு இ-மெயில் வாயிலாக புகாரை பதிவு செய்துள்ளார். தொடர்ந்து, 16ம் தேதி மாணவன், பேராசிரியர் சம்பந்தப்பட்ட கல்லுாரிக்கு அழைக்கப்பட்டு சிறப்பு குழு விசாரணை மேற்கொண்டது. அதன் முடிவில் நான்கு பக்கம் கொண்ட, அறிக்கையை குழு பல்கலைக்கு சமர்ப்பித்துள்ளது.

இருப்பினும், பாரதியார் பல்கலை தரப்பில் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும், கடந்த மூன்று நாட்கள் பல்கலையில் நாக்., தரக்குழு ஆய்வுகள் மேற்கொண்டதால், பல்கலையின் நன்மதிப்பு பாதிக்காமல் இருக்க இதுபோன்ற அனைத்து புகார்களையும் நிலுவையில் வைத்திருந்தனர்.



latest tamil news



பாதிக்கப்பட்ட மாணவன் பி.எச்டி., படிப்பை தொடர முடியாமல் தீர்வுக்காகவும், உரிய நடவடிக்கைக்காகவும் காத்திருக்கும் சூழலில், பல்கலையின் செயல்பாடு அதிருப்தியை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.இதற்கிடையில், பிரச்னைகள் பெரிதாகாமல் தடுக்க, கல்லுாரி நிர்வாகம் சம்மந்தப்பட்ட பேராசிரியரை சஸ்பெண்ட் செய்துள்ளது. இதுகுறித்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இதுகுறித்து, பல்கலை பதிவாளர் (பொறுப்பு) முருகவேலிடம் கேட்டபோது, ''கல்லுாரி அளவில் சம்பந்தப்பட்ட பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதற்கான எழுத்துப்பூர்வமான கோப்பு கல்லுாரியில் இருந்து பல்கலைக்கு இதுவரை வரவில்லை. வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணை பெண்டிங் உள்ளது; முழுமை பெற்று உறுதியானதும் வழிகாட்டி அங்கீகாரம் ரத்து செய்யும் நடவடிக்கையும் எடுக்கப்படும்,'' என்றார்.



ஆடியோ ஆதாரம்




முதல்கட்ட விசாரணைக்கு முன்பு சம்பந்தப்பட்ட பேராசிரியர் மதன்சங்கர் பாதிக்கப்பட்ட மாணவனை அழைபேசியில் அழைத்து, சமரச முயற்சியில் ஈடுபட்டார். அதுசார்ந்த ஆடியோ பதிவும் மாணவன் விசாரணை குழுவிடம் சமர்ப்பித்துள்ளார். அதன் வாயிலாக, பேராசிரியரின் மீது புகார் உறுதியாகியுள்ள நிலையில், நடவடிக்கை தாமதிக்காமல் விரைந்து பல்கலை நிர்வாகம் செயல்படவேண்டும். மேலும், பாதியில் படிப்பை நிறுத்தியுள்ள மாணவனுக்கு தகுதியான வழிகாட்டி தேர்வு செய்து வழங்கி, கல்வியை தொடர பல்கலை நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
S Regurathi Pandian - Sivakasi,இந்தியா
27-மார்-202315:52:32 IST Report Abuse
S Regurathi Pandian ஒழுக்க சீர்கேடு எங்கும் வியாபித்திருக்கிறது. அகமதிப்பீடு, படிப்பை முடிக்க வேண்டும் என்பதால் பலர் வெளியே சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். பல தற்கொலைகளுக்கு இதுபோன்ற பாலியல் தொல்லைகள், பணப் பறிப்பு போன்ற கேடுகெட்ட செயல்களும் காரணம். இந்த விசயத்திலாவது நடவடடிக்கை எடுத்திருப்பது ஆறுதலளிக்கிறது. மாணவர்களுக்கு உரிய அமைப்புகள் ஜனநாயக ரீதியில் செயல்பட அனுமதி வேண்டும்.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
27-மார்-202313:45:04 IST Report Abuse
Sampath Kumar சூறிபிடித்த நொன்னை பேராசிரியர் இவருக்கு எல்லாம் பதவி ஒரு கேடா ஆக மொத்தத்தில் வெறி பிடித்து அல்லியம் கும்பல் அதிகரித்து விட்டது இதற்கு காரணம் நமது சமூக சீர்கேடே சினிமா, சீரியல், மற்றும் காணொளிகள் மூலம் செஸ் பரப்பப்படுகிறது இதனை தாதுக்க விட்டால் கல்வி என்பதே தரமற்றதாக மாறிவிடும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் அரசு கல்வி துறை சேர்ந்து ஒழுங்கு நடவடிக்கை ஏடுக்கவேண்டும் அந்த குழுவில் நமது பார்க்காதலி அவர்களும் சேர்த்து கொள்ளவேண்டும்ம் அவரின் கருத்துக்கள் மிக அற்புதம்
Rate this:
Cancel
Affected - Coimbatore ,இந்தியா
27-மார்-202313:08:12 IST Report Abuse
Affected I have been also affected by this Madan Shankar as well when I was a school going kid Sweet justice after so many years and makes me happy I'm glad he is finally caught now and Kudos to the PhD student to bring this to light
Rate this:
Radhakrishnan Seetharaman - Vizag,இந்தியா
27-மார்-202313:54:17 IST Report Abuse
Radhakrishnan Seetharaman😊👍...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X