சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில், பண்ணாரி அம்மன் சப்பரத்தில் திருவீதி உலா சென்றார்.
சத்தியமங்கலம் அருகே, வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. நடப்பாண்டு திருவிழா கடந்த, 20ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. பண்ணாரி அம்மன், சருகு மாரியம்மன் சப்பரத்தில் புறப்பட்டு, 21ல், சிக்கரசம்பாளையம், இக்கரை நெகமம் புதுார், வெள்ளியம்பாளையம், தொட்டம்பாளையம், அக்கரை தத்தப்பள்ளி, உத்தண்டியூர், அய்யன்சாலை பகுதிகளில் உலா வந்தது.
பின், பவானி ஆற்றை கடந்து நேற்று முன்தினம் இரவு சத்தியமங்கலம் வடக்குபேட்டை தண்டு மாரியம்மன் கோவிலில் தங்கி, நேற்று காலை வடக்குபேட்டை, கடைவீதியில் சப்பரத்துடன் திருவீதி உலா சென்றது. அப்போது பொதுமக்கள் தேங்காய் உடைத்தும், மஞ்சள் நீர் தெளித்தும் வழிபட்டனர். இரவு வேணுகோபால சுவாமி கோவிலில் தங்கி இன்று ரங்கசமுத்திரம், எஸ்.ஆர்.டி.கார்னர், கோணமூலை, காந்திநகர், திம்மையன்புதுார் பகுதிகளில் திருவீதி உலா
நடக்கிறது.
28ல், கோட்டுவீராம்பாளையம், கோம்புபள்ளம், பட்டவர்த்தி அய்யம்பாளையம், புதுவடவள்ளி, புதுக்குய்யனுார், பசுவபாளையம், புதுபீர்கடவு, ராஜன்நகர் ஆகிய ஊர்களில் திருவீதிஉலா முடித்து அன்று இரவு கோவிலை சென்றடைகிறது.