ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே திமிரியை சேர்ந்தவர்கள் சசிகுமார், 46, திருவள்ளுவர் மாவட்டம், மதுரவாயிலை சேர்ந்த ரமேஷ், 51, ஆகியோரை திருட்டு, வழிப்பறி வழக்கில் திமிரி போலீசார் கடந்த மாதம் 27 ல் கைது செய்து வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது தலா 25 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதால், அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட கலெக்டர் வளர்மதிக்கு, எஸ்.பி., கிரண்ஸ்ருதி பரிந்துரை செய்தார். இதையடுத்து அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார்.