பிராமணர் சங்கம் பஞ்சாங்கம் வெளியீட்டு விழா | வேலூர் செய்திகள்| Brahmin Sangam Panchangam Release Ceremony | Dinamalar
பிராமணர் சங்கம் பஞ்சாங்கம் வெளியீட்டு விழா
Added : மார் 27, 2023 | |
Advertisement
 

வேலுார்: வேலுார் பிராமணர் சங்கத்தின் சார்பில் பஞ்சாங்கம் வெளியீட்டு விழா சத்துவாச்சாரியில் நடந்தது. சங்கத்தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். மகளிர் அணி தலைவி லலிதா வரவேற்றார். முரளிதர சுவாமிகள் பங்கேற்று, சோபகிருது ஆண்டு பஞ்சாங்கத்தை வெளியிட்டார்.
அப்போது அவர் பேசியதாவது: தினமும் பஞ்சாங்கத்தை பார்த்து வாரம், திதி, கரணம், யோகம், நட்சத்திரம் படி செயல்களை செய்தால் அவற்றால் சக்தி கிடைக்கப்பட்டு நல்லது நடக்கும். பூஜைகள் செய்து, சனாதன தர்மத்தை கடைபிடித்து, நாம் செயல்களை செய்தால் நமக்கு நல்லதே நடக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
செயற்குழு உறுப்பினர்கள் ஜெயகுமார், சந்தானம், ராஜகோபால், வரதராஜன், கணபதி, ராஜசேகர், லட்சுமணன், துணைத்தலைவர் ராமகிருஷ்ணன், ஆலோசகர் சத்தியமூர்த்தி, செயலாளர் சேகர், மகளிரணி செயலாளர்கள் சுகந்தி, பிருந்தா, லட்சுமணன், நிர்மலா பங்கேற்றனர். பிராமணர் சங்க செய்தி தொடர்பாளர் ராஜா நன்றி கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் வேலூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X