சென்னை, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா விமரிசையாக நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான இப்பெருவிழா, நேற்று இரவு 9:30 மணி முதல் 10:50 மணிக்குள் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, யாகசாலை பூஜைகள் ஆரம்பமாகி, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது.
நாளை அதிகார நந்தி சேவையும், 31ல் ரிஷப வாகன புறப்பாடும் நடக்கிறது. விழாவின் முக்கிய நாளான ஏப்., 2ம் தேதி காலை 6:00 மணிக்கு சந்திரசேகரர் தேர்த் திருவிழாவும், பிரம்மனுக்கு காட்சியருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
ஏப்., 5ல் சந்திரசேகரர் கடல் நீராடல், திரிபுரசுந்தரி, -தியாகராஜர் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. அன்று இரவு கொடியிறக்கத்துடன், வான்மீகி முனிவருக்கு, 18 திருநடனக் காட்சியருளி வீடுபேறு அளித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.