மருந்தீஸ்வரர் கோவிலில் கொடியேற்றம் | சென்னை செய்திகள்| Flag Hoisting at Darshaneeswarar Temple | Dinamalar
மருந்தீஸ்வரர் கோவிலில் கொடியேற்றம்
Added : மார் 28, 2023 | |
Advertisement
 



சென்னை, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா விமரிசையாக நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான இப்பெருவிழா, நேற்று இரவு 9:30 மணி முதல் 10:50 மணிக்குள் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, யாகசாலை பூஜைகள் ஆரம்பமாகி, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது.

நாளை அதிகார நந்தி சேவையும், 31ல் ரிஷப வாகன புறப்பாடும் நடக்கிறது. விழாவின் முக்கிய நாளான ஏப்., 2ம் தேதி காலை 6:00 மணிக்கு சந்திரசேகரர் தேர்த் திருவிழாவும், பிரம்மனுக்கு காட்சியருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

ஏப்., 5ல் சந்திரசேகரர் கடல் நீராடல், திரிபுரசுந்தரி, -தியாகராஜர் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. அன்று இரவு கொடியிறக்கத்துடன், வான்மீகி முனிவருக்கு, 18 திருநடனக் காட்சியருளி வீடுபேறு அளித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X