கடலுார் : கடலுார் அருகே, வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், பள்ளி வேன் மோதியதில் பரிதாபமாக இறந்தான்.
கடலுார் அடுத்த மேற்கு ராமாபுரத்தை சேர்ந்தவர் சீனுவாசன், 39; கடலுார் நெடுஞ்சாலைத் துறையில் உதவி இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தீபா. இவர்களது மூன்று வயது குழந்தை தேஜேஸ்வரன். கிழக்கு ராமாபுரத்தில் இருக்கும் சீனுவாசனின் மாமனார் சக்திவேல் வீட்டில் தேஜேஸ்வரன் இருந்தான்.
இந்நிலையில், நேற்று காலை, சக்திவேல் வீட்டின் முன் உட்கார்ந்திந்தார். சிறுவன் தேஜேஸ்வரன் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது ராமாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியின் வேன் சிறுவன் மீது மோதியது.
இதில் சிறுவன் துடிதுடித்து இறந்தான். தாத்தா கண் எதிரே பேரன் வேன் மோதி இறந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பாதிரிபுலியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.