கடலுார் : திருமண செலவுக்கு பணம் இல்லாததால் மனமுடைந்த மணமகன் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலுார், அரிசி பெரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் ரகுவரன், 32; லாரி மெக்கானிக். இவருக்கும், வில்லியனுாரைச் சேர்ந்த பெண்ணுக்கும் வரும் 10ம் தேதி திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரகுவரன் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இதில், திருமண செலவுக்கு பணம் இல்லாததால், ரகுவரன், துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
வரும் 10ம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில், மணமகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.