ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு மிரட்டல் விடுத்த 4 பேர் கைது | விழுப்புரம் செய்திகள்| 4 people arrested for threatening Panchayat ward member | Dinamalar
ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு மிரட்டல் விடுத்த 4 பேர் கைது
Added : மார் 28, 2023 | |
Advertisement
 
4 people arrested for threatening Panchayat ward member   ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு  மிரட்டல் விடுத்த 4 பேர் கைது



மயிலம் : மயிலத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினரை, கத்தியைக் காட்டி மிரட்டிய 7 பேர் மீது மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து, 4 பேரை கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் கடந்த 24ம் தேதி இரவு நடந்த திருவிழாவின் போது, நாதஸ்வர கலைஞரிடம் 7 பேர் கொண்ட கும்பல் தகராறு செய்தது.

அங்கிருந்த மயிலம் ஊராட்சி வார்டு உறுப்பினர் காசிநாதன் மகன் சரவணன், 26; தட்டிக்கேட்டார். அப்போது அந்த 7 பேரும் சரவணனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில், மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை 11:00 மணியளவில் கூட்டேரிப்பட்டு பகுதியில் கார், பைக்குடன் சந்தேகப்படும்படி நின்றிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர்கள், பிள்ளையார்குப்பம் அருண், 28; புதுச்சேரி, அரியாங்குப்பம் உதயா, 39; அஸ்வின், 35; கோர்க்காடு அன்பரசன், 30; எனவும், திருவிழாவில் சரவணனை மிரட்டியதும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து 4 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து குவாலிஸ் கார், 2 பைக்குகள், 8 மொபைல் போன்கள், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள புதுச்சேரியைச் சேர்ந்த கார்த்தி, பிரவீன் குமார், கருவடிக்குப்பம் கதிரேசன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X