விரக்தியில் தற்கொலை
சின்னமனுார்: எரசக்கநாயக்கனுார் ஊராட்சி அலுவலக வடக்கு தெரு கருப்பய்யா 53. இவர் 10 ஆண்டுகளாக வயிற்றுவலி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்களுக்கு சிகிச்சை எடுத்து வந்தார். சம்பவ நாளில் கழிப்பறையில் தனக்குத்தானே துண்டை வைத்து கழுத்தில் இருக்கி மயக்க நிலையில் கிடந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம் உறவினர், சின்னமனுார் அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டது. பின் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் உயிரிழந்தார். சின்னமனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாலிபர் உயிரிழப்பு
தேனி: தேவாரம் திடீர்புரம் காளியம்மன் கோயில் தெரு கனிஷ் 21. வலிப்பு நோய் பாதிப்பால் தேவாரம், தேனி மருத்துவமனைகளில் மாத்திரை சாப்பிட்டு வந்தார். 10 நாட்களாக மாத்திரை சாப்பிட வில்லை. இதனால் திடீரென பாதிப்பு ஏற்பட்டு தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இறந்தார். தேவாரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தடை லாட்டரி விற்றவர் கைது
தேனி: உத்தமபாளையம் யாதவர் தெரு பழனிவேல்ராஜன் 53. இவர் மார்ச் 26ல் அங்குள்ள பஸ் ஸ்டாண்ட் நுழைவாயில் முன் ரூ.3870 மதிப்புள்ள 6 வகையான 105 லாட்டரிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தார். உத்தமபாளையம் சிறப்பு எஸ்.ஐ., நாட்ராயன், லாட்டரிகளை பறிமுதல் செய்து, பழனிவேல்ராஜனை கைது செய்தார்.
மதுபாட்டில் பதுக்கியவர் கைது
தேனி: மூலக்கடை பிள்ளையார் கோயில் தெரு செல்லையா 50. இவர் அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே அரசு அனுமதி இன்றி 20 மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கினார். கடமலைக்குண்டு போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
சூறாவளியால் பெண் காயம்
கூடலுார்: லோயர்கேம்பில் நேற்று மாலை பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. கடைவீதி தெருவில் ஆரோன் என்பவரின் வீட்டின் சிமெண்ட் கூரை உடைந்து விழுந்ததில் வீட்டிலிருந்த இவரது உறவினர் பெண் ஜெபா 36, காயம் அடைந்தார். மேலும் இவரது வீட்டில் இருந்த தளவாடப் பொருட்கள் சேதமடைந்தன. லோயர்கேம்ப் போலீசார் விசாரிக்கின்றனர்.