பாலக்கோடு: பாலக்கோட்டில், பழமையான புதுார் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் ஆண்டு திருவிழா கடந்த, 6 முதல், 10ம் தேதி வரை நடந்தது. விழாவில் பாலக்கோட்டை சேர்ந்த, 12 கிராம மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அருகிலுள்ள கர்நாடக மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இவர்கள், இக்கோவிலில் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, ஹிந்து சமய அறநிலையத்துறை
கண்காணிப்பாளர் சங்கர் தலைமையில் நேற்று நடந்தது.
இதில், 5 லட்சத்து, 49 ஆயிரத்து, 258 ரூபாயும், 31 கிராம் தங்கம், 900 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவை உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். அவை, பாலக்கோடு அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டது.