கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியிலுள்ள, கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நிறைவுவிழா,
நேற்று கொல்லப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்தது.
கல்லுாரி தாளாளரும், முன்னாள்
எம்.பி.,யுமான பெருமாள், கல்லுாரி தலைவர் வள்ளி ஆகியோர் தலைமை வகித்தனர். கிருஷ்ணகிரி டவுன் டிராபிக் எஸ்.ஐ., சீதாராமன் கலந்து கொண்டார். கம்பம்பள்ளி, கொல்லப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளிகளில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் துாய்மை பணி மேற்கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.
கம்பம்பள்ளி பஞ்., தலைவர் சென்றாயப்பன், வி.ஏ.ஓ., திருநாவுக்கரசு, நாட்டு
நலப்பணித்திட்ட அலுவலர் முருகன்,
கல்லுாரி நிர்வாக அலுவலர் சுரேஷ்
உள்பட பலர் கலந்து கொண்டனர்.