ஓசூர்: ஓசூர், எம்.ஜி.ஆர்., கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், காமன்தொட்டி, கோபசந்திரம் கிராமங்களில், 7 நாட்கள் சிறப்பு முகாம் நடந்தது. தொடர்ந்து, கொத்துாரிலுள்ள தனியார் முதியோர் இல்லத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் முத்துமணி தலைமை வகித்தார். கோபசந்திரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியை ஸ்ரீதேவி முன்னிலை வகித்தார். முதியவர்களுக்கு போர்வை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முதியோர் இல்ல நிறுவனர் ருக்மணி, கல்லுாரி பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக, நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவியர், 100 பேர், முதியோர் இல்ல சுற்றுப்புறத்தில் துாய்மை பணி
மேற்கொண்டனர்.