ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், டி.ஆர்.ஓ., சந்தோஷினி சந்திரா தலைமையில், குறைதீர் கூட்டம் நடந்தது.
முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட, 185 மனுக்கள் பெறப்பட்டன.
கட்டுமான தொழிலாளர் நலவாரியம் சார்பில், கொடுமுடி, ரோஜா நகர், முருகேசன் பணியிடத்தில் விபத்தால் இறந்ததால், அவரது வாரிசுக்கு விபத்து மரண உதவித்தொகை, 5 லட்சத்துக்கான ஒப்பளிப்பு ஆணை வழங்கப்பட்டது. தமிழறிஞர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில், சத்தி, வடக்குபேட்டை பழனிசாமிக்கு, மாதாந்திர உதவித்தொகை, 4,000 பெறுவதற்கான ஆணையை டி.ஆர்.ஓ., வழங்கினார்.
காஞ்சிகோவில், கோமையன்வலசு பகுதி மாற்றுத்திறனாளி வளர்மதிக்கு, முடநீக்கு கருவி, ஊன்று கோல் வழங்கப்பட்டது. மேலும் மாதாந்திர உதவித்தொகை, 1,500 ரூபாயில் இருந்து, 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கி ஆணை வழங்கப்பட்டது.