ஈரோடு: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், ஈரோடு டி.ஆர்.ஓ., சந்தோஷினி சந்திராவிடம், மனு வழங்கி கூறியதாவது:
பெருந்துறை மையப்பகுதியில், பல ஆண்டாக போலீஸ் ஸ்டேஷன் செயல்படுகிறது. அரசு ஆவணப்படி, அவ்விடம் போலீஸ் ஸ்டேஷனுக்கானது. இந்நிலத்தின் பழைய கட்டடத்தில் நீதிமன்றம் செயல்படுகிறது. சில ஆண்டுக்கு முன் நீதிமன்றத்துக்கு வேறிடம் ஒதுக்கினர். அவ்விடம், காவல் துறைக்கு சொந்தமானதாகவும், அங்கு போலீஸ் கவாத்து பயிற்சியும் நடந்தது. தற்போது அங்கு நீதிபதிகள் குடியிருப்புக்கு ஒதுக்கீடு செய்து, குடியிருப்பு அமைந்துள்ளது. பழைய நீதிமன்ற வளாகத்தை புதுப்பிக்க நிதி வந்ததாகவும், போலீசார் அவ்விடத்தை பயன்படுத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
நீதிமன்றம் தனியாக உள்ள நிலையில், பழைய கட்டடத்தை நீதிமன்ற பயன்பாட்டுக்கு விட்டால், போலீஸ் ஸ்டேஷனை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டி வரும். எனவே, போலீஸ் ஸ்டேஷன் தற்போதுள்ள இடத்தில் செயல்பட, நில அளவீடு செய்து அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.