கோபி: பவானி ஆற்றில் அழுகிய ஆண் உடலை தொடர்ந்து, தலை, கை மற்றும் கால்கள் மிதந்ததால், கவுந்தப்பாடியில் பரபரப்பு ஏற்பட்டது.
கவுந்தப்பாடி அருகே பெருந்தலையூர், சிரையாம்பாளையம் பஞ்., யூனியன் துவக்கப்பள்ளி எதிரே, பவானி ஆற்றில் மிதந்து வந்த, தலை, கை மற்றும் கால்கள் இல்லாத ஆண் உடலை, கவுந்தப்பாடி போலீசார் நேற்று முன்தினம் மீட்டனர். முதற்கட்ட விசாரணையில், அடையாளம் தெரியாதவரை, கூர்மையான ஆயுதத்தால் வெட்டி கொலை செய்திருப்பது தெரியவந்தது. பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் சிரையாம்பாளையத்தில் இருந்து, அரை கி.மீ., தொலைவில், மேற்கு குட்டிபாளையம் என்ற இடத்தில், பவானி ஆற்றில் அழுகிய நிலையில் மிதந்த, தலை, இரு கை மற்றும் கால்களை, கவுந்தப்பாடி போலீசார் நேற்று காலை மீட்டனர். பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அடுத்தடுத்த நாளில் பவானி ஆற்றில் உடலை தொடர்ந்து, அதன் பிற பாகங்கள் கிடைத்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.