ஈரோடு: ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில், 700க்கும் மேற்பட்ட கடைகள் செயல்படுகின்றன. மார்க்கெட்டுக்கு, 20 முதல், 25 டன் காய்கறி தினமும் வரத்தான நிலையில் தற்போது, 30 டன் வரத்தாகிறது. இதனால் நேற்று விலை குறைந்து காணப்பட்டது.
ஒரு கிலோ கத்தரிக்காய் - 30 ரூபாய், வெண்டைக்காய்-60, பாகற்காய்-50, புடலை-40, பட்டை அவரை - 60, கருப்பு அவரை - 40, முள்ளங்கி - 25, பீர்க்கன்காய்- 70, பீட்ரூட்-40, கேரட் - 50, பீன்ஸ் - 70, மேரக்காய் - 20, சேனை-50, முட்டைகோஸ் - 20, குடை மிளகாய் - 60, பச்சை மிளகாய் 60, உருளை - 20 ரூபாய்க்கு விற்றது. கடந்த வாரம், 20 ரூபாய்க்கு விற்ற தக்காளி, 10 முதல், 1௫ ரூபாய் வரை விற்பனையானது. வரத்து குறைவால் ஒரு கிலோ பச்சை பட்டாணி, 100 ரூபா; 70 ரூபாய்க்கு விற்ற இஞ்சி, 140 ரூபாய்க்கும் விற்றது.